![]() |
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது சாமியோவ்......... |
எங்கு பார்த்தாலும் புரட்சிப் போராட்டம்.!!!! , ஆஹா நாட்டுக்காக போராட என் தலைவன் வந்துட்டாரு...... இனி கலக்கல்தாணு குதுகலத்தில் "தலைவர் வாழ்க"ன்னு கோஷமிட்டான் அசோக் , டேய் எழுந்திரு மணி எட்டு ஆச்சு இன்னும் தூங்கிகிட்டே இருக்கணு சொல்லாமல் சொல்லியது அவன் மொபைல் அலாரம், அட முட்டாள்.!! இது நாட்டு மக்களின் நலனுக்காக நடக்கும் போராட்டம் அல்ல.. "என் தங்கம் என் உரிமை" என்று டிவிக்குள் கனைத்துக்கொண்டிருந்தார் 'சமூக சேவகர்' பிரபு . ரிமோட் பட்டனை தொட்டான் மறுபக்கம் செண்டிமண்டல் மழையில் நனைய வைத்தார் 'அணில் விசய்' .!!, அடுத்த அஞ்சு நிமிஷத்துல சூரியாவும், மாதவனும் தங்கம் வாங்க..!!, இங்க வாங்க அங்க போகாதிங்க... அவனுங்க திருடனுங்க உங்கள ஏமாத்தி நடுத் தெருவுல கொண்டுவந்து விட்டுடுவானுங்கனு மாறி மாறி உண்மைய சொல்லி, வாங்குன காசுக்கு மேல நடிச்சிக்கிட்டு இருந்தாங்க ...அப்போதான் அசோகின் மூளையில் சுர்ருன்னு உரைத்தது .! விலைவாசி உயர்வு , ஊழல் , பட்டினிச் சாவு, குழந்தை தொழிலாளர்கள் , போன்ற பிரச்சனைகளை விட "என் தங்கம் என் உரிமை" தான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்னு :P
ஆஹா..!! இந்த மாதிரி நீங்க போராடி ஜெயிச்சதுனால , ஏழை விவசாயிகள் அவுங்க பொண்ணுங்க கல்யாணத்துக்கு தங்கத்துக்கு பதிலா தகரத்த வாங்கி கல்யாணம் பண்ற நிலைமைக்கு உயந்துட்டாங்க ..
ஒரு மொக்க படத்துக்கு 120 ரூபா குடுத்துட்டு, தலைவர், தல,இளைய தளபதி, புன்னகை அரசி , புழுங்கல் அரிசினு பெருமை படுற எருமைங்க இருக்குற வரைக்கும் "என் தங்கம் என் உரிமை" போன்ற சமூக அக்கறை கொண்ட போராட்டங்கள் தொடரும் .....
No comments:
Post a Comment