Friday, October 12, 2012
காதல் ------>>>>>>> கல்யாணம் ????? PART-1
இன்று நிச்சயமாக அப்ரூவல் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் கல்லூரி நிர்வாகிகளை சந்திக்க போன சுரேந்தர், அறையின் முன் எந்தவித அலட்டல்களும் இல்லாமல் பவ்யமாக காத்துக் கொண்டிருந்தான் ..சார் மீட்டிங் நடக்குது உங்கள கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னாங்கன்னு ...... நீண்டது PA வின் குரல்.! பழகிப்போன பதில் தான் இது . .
எதிரே ஹீரோயிசம் காட்டிக்கொண்டு நான்கு மாணவர்கள் , அதை ரசித்துக் கொண்டு சில மாணவிகள் என பர பரப்பாக இருந்த நேரத்துல, ஒருத்தன் மட்டும் எதையும் பார்க்காமல் பெண்களிடம் ஒரு தனி டிராக் ஓட்டிக் கொண்டிருந்தான்.... நீ நடத்துப்பா........! என்று மனதில் சிரித்துக் கொண்டே, மலரும் நினைவுகளாக அவன் டைரியின் பக்கங்களை மனதில் திருப்பிப் பார்த்தான் சுரேந்தர் .. என்ன கொடுமை :( டைரியின் பக்கங்களில் முக்கால்வாசி அவனது நண்பர்களின் காதல் கதைகளே நிரம்பி வழிந்தது ...
காதல் 1 : "மச்சான் அவ உன்ன பாக்குறாடா" இது போதும் ஒருத்தன பைத்தியமாக்க.. கொஞ்ச நாள்ல அவனே சொல்ல ஆரமிச்சுட்டான் "ஆமா மச்சி அவ என்னையே பக்குராடானு" .. இன்னும் கொஞ்ச நாள்ல 'மச்சி அயம் இன் லவ் வித் ஹெர்' நு சொல்லிட்டான்... ஹ ஹா.. அவன் முதல் காதல் முற்றிலும் கோணல், சாரி அவனுக்கு அந்த காலேஜ்ல அது முதல் காதல் :P
காதல் 2 : ஒரு பொண்ணோட போட்டோவ மொபைலுல வச்சிருந்தான்.. மச்சி என்னடா இதுன்னு கேட்டா .. லவ் நு சொல்றான் ... இருக்கலாம் தப்பில்ல :)
காதல் 3 : "பத்து அப்ளிகேசன் போடணும் எந்த பொண்ணு ஓகே சொல்லுதோ அந்த பொண்ண பிக் அப் பண்ணனும் " நு சொல்லும் ரோமியோவை நம்பும் ஜூலியட்கள் ஏராளம் ..இதுக்கு பேரு லவ் ஆம் .!! அவன் அப்ளிகேசன் போடாத இடமே கிடையாது :P நல்லா இருக்குடா உங்க லாஜிக்கு.
காதல் 4 : அவளுக்கு பிடித்த கலரில் விஷத்தைக் கொடுத்தால் கூட குடிக்கும் அளவுக்கு ஒருத்தனின் காதல் .. என்னமோ போங்க ...
காதல் 5 : பப்ளிக்குட்டி காதல் .! பாக்குற எல்லாருகிட்டயும் நான் அவள லவ் பண்ணுறேன் லவ் பண்றேன்னு அலாரம் அடிப்பதும் ஒரு வகை காதல் ...உங்க பப்ளிக்குட்டில தீய வச்சி கொளுத்த :P
காதல் 6 : "சூப் பாய்ஸ் அண்ட் ரிச் கேர்ல்ஸ் லவ் " மாடர்ன்-அ பேர வச்சிக்கிட்டு பாக்குற பொண்ணுங்க எல்லாருகிட்டயும் பிரெண்டு ரெகுவஸ்ட் குடுக்கறது, பீட்டர் விடுறது , அப்புறம் பொண்ணுங்க எந்த status போட்டாலும் தவறாம லைக் குடுக்கறது கடைசில லவ் நு சொல்றது :P நீங்கலாம் நல்லா வருவீங்கடா ...
காதல் 7 : காதலுக்கான காரணம் "ஒரே மதம்" "ஒரே இனம்" "ஒரே குலம்" "ஒரே குட்டை " "ஒரே மட்டை" சோ எங்க வீட்டுல யாரும் அப்போஸ் பண்ண மாட்டாங்க:) இப்படி பிற்போக்குத் தனமா காரணம் சொல்லிட்டு, இது காதல்னு சொல்றான். வெளங்கும்டா உங்க லவ் :P
காதல் 8 : ஏன்டா அவள உனக்கு புடிச்சிருக்கு? நு கேட்டா . நான் ஹைட்டா இருக்கேன், அவளும் ஹைட்டா இருக்கானு , எதோ போலீஸ்-ல ஆள் எடுக்கற மாதிரி செலக்ட் பண்ணி லவ் பண்றாங்க .போய்த் தொலையுது :P சரி நீ லவ் பண்றத அவகிட்ட சொல்லுடானா, சொல்றான் சொல்றான் இன்னும் சொல்லிகிட்டே இருக்கான் .இதயம் முரளி இல்லாத குறைய போக்கிடிங்க:P
காதல் 9 : Facebook அலம்பல் .!Mark Elliot Zuckerberg -காக கோயில் கட்டும் அளவுக்கு அவள் Facebook -ற்கு கடமை பட்டிருக்கிறாள் :P, Facebook -கும் அவளுக்கும் அப்படி ஒரு நெருக்கம் , பல் துலக்குவது முதல் fast food சாப்டது வரைக்கும் அப்டேட் பண்ணுவாள் .. சிந்துபாத், கன்னித்தீவு கதைகளை விட அவள் காதல் சிக்கலானது :P அவள் இப்போ யாரா லவ் பண்ணுறா , அது எத்தனாவது லவ் நு அவளே சொன்னதான் எல்லாருக்கும் புரியும் ..
காதல் 10 : இது "Facebook " ஆ இல்ல "Family-book " ஆ நு சந்தேகம் வர அளவுக்கு மாறி மாறி லவ் பண்ணுவது இப்போதைய ட்ரெண்டு :P போய் புள்ள குட்டிங்கள படிக்க வைக்காம இன்னும் Facebook ல வந்து லவ் பண்ணும்போது அவுங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல :P. கொஞ்ச நாள்ல அவுங்க குழந்தைக்கும் ஒரு Facebook ஐடி குடுத்து லைக் போட சொன்னாலும் சொல்லுவாங்க போல.!!
காதல் 11 : காதல் கவிதைகள் எழுதித் தள்ளுவது , பார்த்தவுடன் காதல் , டைம் பாஸ் காதல் , ஹீரோஇசம் பண்ணுவது , அறியாத வயதில் வரும் காதல் நு இவர்களின் முட்டாள் தனத்திற்கு அளவே இல்லை :P "இந்த முட்டாள்கள்ல நீயும் ஒருத்தங்குரத மறந்துறாத நு" ஒரு படத்தோட டயலாக் மூலம் அவன் மனசாட்சி அவனை மானாவாரியாக திட்டும் போது... சார்...., மீட்டிங்கு முடிச்சிடுச்சி உள்ள போங்கனு ஒரு குரல் ... சிரித்துக் கொண்டே நகர்ந்தான் சுரேந்தர் ....
___________xxxxxxxx________________________xxxxxxx__________________________
அவன் , அவள் என்ற ஏக வசனத்திற்காக மன்னிக்கவும் :)
"இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல :) இது முற்றிலும் உண்மை, கற்பனை அல்ல :)" நினைவலைகள் தொடரும் ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment