Sunday, December 23, 2012

கர்நாடக இசைக்கலைஞர்கள் Vs இசைக்கொலைஞர்கள்


         "கர்நாடக இசை கேட்டேள்னா  மன அமைதி கிட்டும், மெய்மறந்து போய்டுவேள் " இப்படி யாரோ சொன்னதக்  கேட்ட  ரவீந்தர்   .! அடுத்த நாளில் இருந்து கர்நாடக இசையில் மூழ்கலானான் .. நாட்கள் நகர்ந்தன, அவன் காதுகளை எட்டிய இசை மனதை மட்டும் எட்டவேஇல்லை ....!!!, இசைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்னு மனச தேற்றும் போது..." i pod ல கேட்டேள்னா எப்படி???. சபால பாடுறச்ச கேட்டேள்னா தானே நன்னா இருக்கும்னு " மறுபடியும் முனுமுக்க , சரி  கேட்டுத்தான் பாப்போம்னு முடிவெடுத்தான் ..............


           மார்கழி வந்தது..!! இசைக் கலவரங்கள் செய்யும் கூட்டங்கள் கூடி கும்மியடிக்கும் சபாக்களுக்கு பஞ்சமில்லாமல் போனது ...

                  சபாவின் மூன்றாவது வரிசையில் ,இசையின் ஆர்வ மிகுதியில்  இருக்கையின் நுனியில் ரவீந்தர்    .. "சந்தான கோபாலா......... னு  கணீர்  குரலுடன் 'வகுளாபரணம்' ராகத்துல கலவரம் பண்ண ஆரம்பிச்ச பெரியவர் சுமார்  கால் மணி நேரம் வரை  முக பாவனைகள் காட்டி முன் வரிசைக்காரர்களை கதறவிட்டார் .. பதறிப் போன ரவீந்தர்..!!, நடையைக் கட்ட நினைக்கும் வேளையில்  , "அடுத்ததாக செல்வி பிரக்சித்தா வின் இசைமழை " னு ஸ்பீக்கர் அலறியதைக் கேட்டவுடன்.... அவள்  இசை மழையில் நனைந்தால் என்ன ?? கரைந்தா போயிடுவோம்னு அவன் மனசாட்சி சொன்னது ...

           "செல்வி பிரக்சித்தா..... B.E (ECE ) முடித்தவள் ,  MBBS சீட்  கிடைத்தும்  அதை ஏற்காமல் இசைக்காகவே தனது CAREER ஐ விட்டுக் கொடுத்தவள், அவள் வளர்க்கும் நாய்க்குட்டிக்கும்  இசை ஞானம் இருக்கும் என்றால்..!!!! அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .. இவள் எங்களது  மகள் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்".... என அவளது அப்பா குடுத்த பில்ட் அப்க்கு அளவே இல்லை ..... சுயபுராணம் முடிந்தவுடன்,  "அபேரி "  ராகத்துல பாடத் தொடங்கினால்   செல்வி பிரக்சித்தா..!!!   சொல்லிக்கொள்ளும்படி அப்படி ஒரு இசை ஞானம் அவளுக்கு இருப்பதாக தெரியவில்லை....  அவள் பாடியது அபேரி ராகம்னா??    "மீண்டும் கோகிலா"   படத்துல  'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம்'  பாட்டு என்ன ராகம்னு புரியாமல்  குழம்பினான் ரவீந்தர் ...  மானவதி  ராகம், சரசாங்கி ராகம்னு .... பூசி மொழுகி அவள் முடிக்கும்  தருணத்தில்,  ஒரு துண்டுச்சீட்டு அவளிடம் வந்தடைந்தது அதில்  "meesiq ல  எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது??  அத பத்தி  கொஞ்சம் சொல்லுங்கன்னு" ஒரு request-ஆம்.... அவள்  மிக ஆர்வத்துடன் பதிலளிக்கத் தொடங்கினால், "நான்  ரெண்டு வயசா  இருக்கறச்சவே  பாட ஆரம்பிச்சுட்டேன்...!! எல்லாரும் சொல்லுவா குழந்தைக்கு Tendency இருக்கு I mean towards music, நல்ல future இருக்குனு  "  இப்படி நீண்டது செல்வி பிரக்சித்தாவின் சுயபுராணம்   PART 2... அவள் பாடுனது கால் மணி நேரம் பதில் சொன்னது அரை மணி நேரம் ....!!!!!!!!!!!

              மும்மூர்த்திகள் , ஆதி மும்மூர்த்திகள் இயற்றிய இசை, இன்று இவர்களைப்போல சில தற்பெருமைவாதிகள் , தரமில்லாத கலைஞர்களிடம் பிடியில் சிக்கித் தவிக்கிறது .......இவர்களை  இசைக்கலைஞர்கள்  என்பதைவிட இசைக்கொலைஞர்கள் என்றே சொல்லணும்

Tuesday, November 6, 2012

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு..!!!

சூப்பர்  ஸ்டார்  யாருன்னு கேட்டா சின்ன குழந்தை கூட சொல்லும், ரஜினிகாந்த்..!!!  தமிழ் சினிமாவின் தாரக மந்திரம் , வருங்கால   இந்திய பிரதமர் , எளிமையின் சிகரம் , இவரு பேரக் கேட்டாலே சும்மா அதிரும் .. இப்படி ஓவரா பில்டப் பண்ணும் ரசிகர்களின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல ..

1975இல்  இருந்து, தமிழ் நாட்டுக்க்காகவும்   , தமிழ் மக்களின்   நலனுக்காகவும் வாழும் ஒரே மனிதர்னா அவர் ரஜினிதான் ..  காவேரி பிரச்சனையாகட்டும் காஷ்மீர்  பிரச்சனையாகட்டும் கருத்து சொல்ல மட்டும்  முதல் வரிசையில நிப்பாரு ... 2002 ல தமிழ் நாட்டுக்கு காவேரி நீர திறந்துவிட முடியாதுன்னு கர்நாடகா சொன்னப்ப , நதிநீர் இணைப்புக்கு  என் சொந்த பணம் ஒரு கோடி  தரேன்னு அரசியல்வாதிங்க மாதிரி அறிக்கை மட்டும் விட்டாரு, இப்போ 2012  இன்னும் அந்த ஒரு கோடிய கொடுத்த மாதிரி தெரியல . பாவம்  ரஜினிகிட்ட  காசு  இல்ல போலும் ......

எந்த கட்சி ஆட்சிக்கு வருமோ, அந்த கட்சிக்கு  அதரவுனு  வெள்ளைப் புறாக்கள பறக்க விடுவார் .. 'ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனதற்கும்  ரஜினிதான் காரணம்'னு அவுங்க ரசிகர்கள் பேனர் வைச்சத பாத்து , என்ன நானே ஒரு முறை கிள்ளி பாத்தேன் ...  "அ .தி .மு .க  மட்டும் திரும்ப  ஆட்சிக்கு வந்தா  கடவுளால கூட தமிழ்நாட்ட காப்பாத்த முடியாது"ன்னு 1996 ல சொன்னாரு ,, அவரே 2011ல  "தமிழ்நாட்ட காப்பாத்திடீங்க" நு அ .தி .மு .க  ஆட்சிக்கு வந்ததும்  வெள்ளைக் கொடி காட்டுனத யாரும் மறக்கல ..ஒகேனக்கல் காவேரி நீர் பிரச்சனை வந்ததும்  கன்னட தலைவர்கள திட்டினார்.. "உன் படம் கர்நாடக தியேட்டர்ல ஓடாது" நு அவுங்க கருப்புக் கொடி காட்டுனதும்   .. மறுபடியும் வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்தார் ... பொழைக்கத் தெரிஞ்ச புள்ள ... நீங்க நல்ல வருவீங்க சார் ...

               "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே " அடிக்கடி சொல்ற டயலாக் ... ரஜினி  இந்த டயலாக் சொல்லும் போது "என்னை வாழ வைத்த , வாழ  வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் பலியாடுகளே "நு அதன் உள் அர்தத்த புரிஞ்சிக்கணும் ...  அவர் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு வீதம்   26 கோடி , 45 கோடின்னு சம்பளம் வாங்கிட்டு ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் ராகவேந்தர் கோயிலுக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக  10 கோடி கொடுப்பார் இந்த கர்ண பிரபு .. கண்ணுக்கு தெரியுற  மக்களுக்கு அவர் கடனாகூட  ஒரு ரூபா தர மாட்டார் ... சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை விபத்தப்போ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக  40 லட்ச ரூபாய்க்கு மருந்து பொருட்கள கொடுத்த மம்முட்டிக்கு  இருந்த அக்கறை கூட ரஜினிக்கு இல்ல ... அதே ரஜினி குணமாகி சிங்கப்பூர் ல இருந்து வந்தப்ப பாக்கப் போன ரசிகர்களுக்கு போலீஸ் தடியடியும் , அடிப்பட்டு ரத்தம் கொட்டுனதும்தான் மிச்சம் ..


ரஜினி இன்னும் நிறைய நல்லது செஞ்சிருக்கார் , இன்னும் செய்வார் ......


 ரஜினி படம் ரிலிஸ் ஆனா போதும் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ண பல  முட்டாள்கள் கூட்டம் முளைக்கும் , அட முட்டாள்களே ..!!!  உங்க தலைவன் பேர சொல்லி அந்த பால , பட்டினியால சாகுற குழந்தைங்களுக்காக குடுத்தா உங்கள என்ன போலீஸ் புடிக்குமா ???

                        வார்த்தைக்கு வார்த்தை"தலைவா"ன்னு சொல்லும் விசிறிகளுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமில்லை ... ரஜினி தலைவர்னு சொன்னா  மக்களுக்காகவே எளிமையா வாழ்ந்த  காமராஜர் , பிரபாகரன் , சேகுவேரா , எம். ஜி. ஆர், இவுங்கல்லாம் யாரு ???...

Thursday, November 1, 2012

சுருங்கிய இதயங்கள் ..!!!!

         தீபாவளி ,நியூ இயர் , பர்த்டே,கிறிஸ்துமஸ் ,ரம்ஜான் , இப்படி  எது வந்தாலும் நாலு புது டிரஸ் வாங்கி  போட்டோமா, பத்து பதினஞ்சு போட்டோஸ் எடுத்தோமா, அத Facebook ல upload   பன்னுனமா 50 likes ,100  comments வர வரைக்கும் மொக்க போட்டோமா,அப்புறம் அந்த டிரஸ் பத்தி பெருமை பேசி முடிச்சா  தான் நமக்கு சந்தோஷம்... இந்த மாதிரி விசேஷ நாட்கள்ல கூட  ஒருவேளை  சாப்பாடு மட்டும் சாப்டுற ஆதரவற்ற குழந்தைங்களும் நமக்கு பக்கத்துல தான்  இருக்காங்க அவங்களுக்கு எதாவது நல்லது பண்ணலாம்னு சொன்னா....... ஓஓ...ஹோ ... அப்டியா ..!!! அதுக்கு நான் என்ன பண்ணட்டும் ? அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? நான் சம்பாதிக்கிறேன்  நான் செலவு பண்றேன்... நல்ல பதில் ...      

      
            ஆப்பிரிக்கால   பட்டாம்பூச்சி சிறகடிச்சா, அமெரிக்கால புயல் வரும்னு   "CHAOS THEORY " , "BUTTERFLY EFFECT " நு ஏதாவது  கதை சொல்லி ஏமாத்துனா வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியாம பார்ப்போம் .!! ஆனா, தஞ்சாவூர்ல  ஒரு விவசாயி விதைக்குற நெல்லுக்கும் சென்னை சரவணபவன் ல  "ஆஹா ரொம்ப நன்னா இருக்கு" நு சொல்லிண்டு சப்புக் கொட்டி  நாம   சாப்பிடுற சாப்பாட்டுக்கும்  சம்பந்தம் இருக்குனு சொன்னா       "I see..!! ,Hey, are you joking ??" நு  சொல்ற அறிவுஜீவிகள் அதிகம் ...

           நாம குடிக்கற பாயாசத்துல முந்திரி பருப்பு இல்லாதது நமக்கு குறையா இருக்கு . மூட்டை மூட்டையா முந்தரிய  வெளைய  வச்ச கடலூர்  மக்கள் "தானே" புயலுக்கு அப்புறம் தடம் தெரியாம இருக்காங்க .. அவுங்க குழந்தைங்க இன்னைக்கு ஆதரவற்றோர் விடுதிகள்ல....

            தீபவளினா பட்டாசு வாங்கி வெடிச்சா தான் நமக்கு பெருமை , பக்கத்துக்கு வீட்டுக்காரன் 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கிட்டா,
நாம கொறஞ்சது 2500 ரூபாய்க்காவது பட்டாசு வாங்குனாத்தான் கெளரவம் ... இல்லைனா வரலாறு நம்மள பத்தி தப்பா பேசும்ல ...!! நம்ம வெடிக்குற பட்டாச தயாரிச்ச பாதி பேர் இப்போ உயிரோட இல்ல , அவுங்க குழந்தைங்களும் இன்னைக்கு ஆதரவு இல்லாம தான் இருக்காங்க ....


            அதுக்கு நாம என்ன பண்ண  முடியும் ..!! நாம தான் சென்னைல safe -ah  இருக்கோம்ல .நம்ம வீடு, நம்ம குழந்தைங்க நல்லா இருக்காங்க அது போதும் நமக்கு , யார் எப்படி போனா நமக்கு என்ன ??.... அட நல்லவங்களே , நாளைக்கே 7.1  ரிக்டர்ல ஒரு பூகம்பம் வந்தா நமக்கும் அதே நிலைமை தான் ...கோடி கோடியா பணம் வச்சிருந்தாலும் பசிச்சா அந்த பேப்பர யாராலும் சாப்பிட முடியாது, இல்லாதவங்களுக்கும்  கொஞ்சம் கொடுங்க கொறஞ்சிட மாட்டோம் ..



            கிரிக்கெட் , சாய் பாபா , நித்யானந்தா , திருப்பதி உண்டியல் ,பியுட்டி பார்லர்  , சினிமா ,டாஸ்மாக்  இப்படி நல்ல விஷயங்களுக்காக உதவிக் கரம் நீட்டுற நீங்க, முடிஞ்சா ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உங்க உதவிக் கரங்கள நீட்டுங்க......





Courtesy :  Photographer ELISE JACOB (HARD RAIN PROJECT)

Friday, October 26, 2012

என் தங்கம் என் உரிமை..!!

எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது சாமியோவ்.........
  
              எங்கு பார்த்தாலும் புரட்சிப் போராட்டம்.!!!! , ஆஹா  நாட்டுக்காக போராட என் தலைவன் வந்துட்டாரு...... இனி கலக்கல்தாணு குதுகலத்தில் "தலைவர் வாழ்க"ன்னு கோஷமிட்டான் அசோக் , டேய் எழுந்திரு மணி எட்டு ஆச்சு  இன்னும் தூங்கிகிட்டே இருக்கணு  சொல்லாமல் சொல்லியது அவன் மொபைல் அலாரம், அட முட்டாள்.!! இது  நாட்டு மக்களின் நலனுக்காக நடக்கும் போராட்டம்  அல்ல.. "என் தங்கம் என் உரிமை"  என்று  டிவிக்குள் கனைத்துக்கொண்டிருந்தார் 'சமூக சேவகர்' பிரபு . ரிமோட் பட்டனை  தொட்டான் மறுபக்கம்  செண்டிமண்டல் மழையில் நனைய வைத்தார்  'அணில் விசய்' .!!, அடுத்த அஞ்சு நிமிஷத்துல சூரியாவும், மாதவனும் தங்கம் வாங்க..!!, இங்க வாங்க அங்க போகாதிங்க... அவனுங்க திருடனுங்க  உங்கள ஏமாத்தி நடுத் தெருவுல  கொண்டுவந்து விட்டுடுவானுங்கனு மாறி மாறி உண்மைய சொல்லி, வாங்குன காசுக்கு மேல நடிச்சிக்கிட்டு இருந்தாங்க ...அப்போதான் அசோகின் மூளையில் சுர்ருன்னு உரைத்தது .! விலைவாசி உயர்வு , ஊழல் , பட்டினிச் சாவு, குழந்தை தொழிலாளர்கள் , போன்ற பிரச்சனைகளை விட "என் தங்கம் என் உரிமை" தான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்னு :P



          ஆஹா..!! இந்த மாதிரி  நீங்க  போராடி ஜெயிச்சதுனால   , ஏழை விவசாயிகள் அவுங்க பொண்ணுங்க கல்யாணத்துக்கு தங்கத்துக்கு பதிலா தகரத்த வாங்கி கல்யாணம் பண்ற நிலைமைக்கு உயந்துட்டாங்க ..

          ஒரு மொக்க படத்துக்கு 120 ரூபா குடுத்துட்டு, தலைவர், தல,இளைய  தளபதி,  புன்னகை அரசி ,   புழுங்கல்  அரிசினு பெருமை படுற எருமைங்க இருக்குற வரைக்கும் "என் தங்கம் என் உரிமை" போன்ற சமூக அக்கறை கொண்ட போராட்டங்கள் தொடரும் ..... 

Friday, October 12, 2012

காதல் ------>>>>>>> கல்யாணம் ????? PART-1


  இன்று நிச்சயமாக  அப்ரூவல் வாங்கி  விடலாம் என்ற நம்பிக்கையில் கல்லூரி நிர்வாகிகளை சந்திக்க போன சுரேந்தர், அறையின் முன் எந்தவித அலட்டல்களும்  இல்லாமல் பவ்யமாக காத்துக் கொண்டிருந்தான் ..சார்  மீட்டிங் நடக்குது உங்கள  கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னாங்கன்னு  ...... நீண்டது PA  வின் குரல்.! பழகிப்போன பதில் தான் இது . .

                                  எதிரே ஹீரோயிசம்  காட்டிக்கொண்டு நான்கு மாணவர்கள் , அதை ரசித்துக் கொண்டு சில மாணவிகள் என பர பரப்பாக இருந்த நேரத்துல, ஒருத்தன் மட்டும் எதையும் பார்க்காமல் பெண்களிடம்  ஒரு தனி   டிராக் ஓட்டிக் கொண்டிருந்தான்....  நீ நடத்துப்பா........! என்று மனதில் சிரித்துக்  கொண்டே, மலரும் நினைவுகளாக   அவன் டைரியின் பக்கங்களை மனதில் திருப்பிப் பார்த்தான் சுரேந்தர் .. என்ன  கொடுமை :( டைரியின் பக்கங்களில் முக்கால்வாசி அவனது நண்பர்களின் காதல் கதைகளே நிரம்பி வழிந்தது ...

        காதல் 1 :  "மச்சான் அவ உன்ன பாக்குறாடா" இது போதும் ஒருத்தன பைத்தியமாக்க.. கொஞ்ச நாள்ல அவனே சொல்ல ஆரமிச்சுட்டான்  "ஆமா மச்சி அவ என்னையே பக்குராடானு"  .. இன்னும் கொஞ்ச நாள்ல  'மச்சி அயம் இன் லவ் வித் ஹெர்'  நு  சொல்லிட்டான்...    ஹ ஹா..  அவன் முதல் காதல் முற்றிலும் கோணல், சாரி  அவனுக்கு அந்த காலேஜ்ல அது  முதல் காதல் :P
      
    காதல் 2 :  ஒரு பொண்ணோட போட்டோவ மொபைலுல வச்சிருந்தான்.. மச்சி என்னடா இதுன்னு  கேட்டா .. லவ் நு சொல்றான் ... இருக்கலாம் தப்பில்ல :) 

   
      காதல் 3 : "பத்து அப்ளிகேசன் போடணும்  எந்த பொண்ணு ஓகே சொல்லுதோ அந்த பொண்ண  பிக் அப் பண்ணனும் " நு சொல்லும் ரோமியோவை நம்பும் ஜூலியட்கள் ஏராளம் ..இதுக்கு பேரு லவ் ஆம் .!! அவன் அப்ளிகேசன் போடாத இடமே கிடையாது :P நல்லா இருக்குடா உங்க லாஜிக்கு.
        
      காதல் 4 : அவளுக்கு பிடித்த கலரில் விஷத்தைக் கொடுத்தால் கூட குடிக்கும் அளவுக்கு 
ஒருத்தனின் காதல் .. என்னமோ போங்க ...
   
       காதல் 5 : பப்ளிக்குட்டி காதல் .! பாக்குற எல்லாருகிட்டயும் நான் அவள லவ் பண்ணுறேன் லவ் பண்றேன்னு அலாரம் அடிப்பதும்  ஒரு வகை காதல் ...உங்க பப்ளிக்குட்டில தீய வச்சி கொளுத்த :P 


        காதல் 6 : "சூப் பாய்ஸ்  அண்ட் ரிச் கேர்ல்ஸ்  லவ் " மாடர்ன்-அ பேர வச்சிக்கிட்டு   பாக்குற பொண்ணுங்க எல்லாருகிட்டயும் பிரெண்டு ரெகுவஸ்ட் குடுக்கறது, பீட்டர் விடுறது , அப்புறம் பொண்ணுங்க எந்த status போட்டாலும் தவறாம லைக் குடுக்கறது கடைசில லவ் நு சொல்றது  :P  நீங்கலாம் நல்லா வருவீங்கடா ...

         காதல் 7 : காதலுக்கான காரணம்  "ஒரே மதம்"   "ஒரே இனம்"  "ஒரே குலம்"  "ஒரே குட்டை "  "ஒரே மட்டை"  சோ எங்க வீட்டுல யாரும் அப்போஸ் பண்ண மாட்டாங்க:) இப்படி  பிற்போக்குத் தனமா காரணம் சொல்லிட்டு, இது காதல்னு சொல்றான். வெளங்கும்டா உங்க லவ் :P

         காதல் 8 : ஏன்டா அவள உனக்கு புடிச்சிருக்கு? நு கேட்டா . நான் ஹைட்டா  இருக்கேன், அவளும் ஹைட்டா  இருக்கானு , எதோ போலீஸ்-ல ஆள் எடுக்கற மாதிரி செலக்ட் பண்ணி லவ் பண்றாங்க .போய்த்  தொலையுது :P  சரி நீ லவ் பண்றத அவகிட்ட சொல்லுடானா, சொல்றான்  சொல்றான்  இன்னும்  சொல்லிகிட்டே இருக்கான் .இதயம் முரளி இல்லாத குறைய  போக்கிடிங்க:P 


             காதல் 9 : Facebook அலம்பல் .!Mark Elliot Zuckerberg -காக கோயில் கட்டும் அளவுக்கு அவள் Facebook -ற்கு கடமை பட்டிருக்கிறாள் :P,  Facebook -கும் அவளுக்கும் அப்படி ஒரு நெருக்கம் ,  பல் துலக்குவது முதல் fast food  சாப்டது வரைக்கும் அப்டேட் பண்ணுவாள் .. சிந்துபாத், கன்னித்தீவு கதைகளை விட அவள் காதல் சிக்கலானது :P அவள் இப்போ யாரா லவ் பண்ணுறா , அது  எத்தனாவது  லவ் நு அவளே சொன்னதான் எல்லாருக்கும் புரியும் .. 


         காதல் 10 :  இது "Facebook " ஆ இல்ல  "Family-book " ஆ  நு சந்தேகம் வர அளவுக்கு மாறி மாறி லவ் பண்ணுவது இப்போதைய  ட்ரெண்டு  :P போய் புள்ள குட்டிங்கள படிக்க வைக்காம இன்னும் Facebook ல வந்து லவ் பண்ணும்போது அவுங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல  :P.  கொஞ்ச நாள்ல அவுங்க குழந்தைக்கும் ஒரு Facebook  ஐடி குடுத்து லைக் போட சொன்னாலும் சொல்லுவாங்க போல.!!

                  காதல் 11 : காதல் கவிதைகள்  எழுதித் தள்ளுவது , பார்த்தவுடன் காதல் , டைம் பாஸ் காதல் , ஹீரோஇசம் பண்ணுவது , அறியாத வயதில் வரும்  காதல் நு  இவர்களின் முட்டாள் தனத்திற்கு அளவே இல்லை :P   "இந்த முட்டாள்கள்ல  நீயும் ஒருத்தங்குரத மறந்துறாத  நு"  ஒரு படத்தோட டயலாக் மூலம்  அவன் மனசாட்சி அவனை   மானாவாரியாக திட்டும் போது... சார்...., மீட்டிங்கு முடிச்சிடுச்சி உள்ள போங்கனு ஒரு குரல் ... சிரித்துக் கொண்டே நகர்ந்தான் சுரேந்தர் ....

          
 ___________xxxxxxxx________________________xxxxxxx__________________________

    அவன் , அவள் என்ற ஏக வசனத்திற்காக மன்னிக்கவும் :)
        "இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல :) இது  முற்றிலும் உண்மை, கற்பனை அல்ல :)" நினைவலைகள் தொடரும் ....