Thursday, November 1, 2012

சுருங்கிய இதயங்கள் ..!!!!

         தீபாவளி ,நியூ இயர் , பர்த்டே,கிறிஸ்துமஸ் ,ரம்ஜான் , இப்படி  எது வந்தாலும் நாலு புது டிரஸ் வாங்கி  போட்டோமா, பத்து பதினஞ்சு போட்டோஸ் எடுத்தோமா, அத Facebook ல upload   பன்னுனமா 50 likes ,100  comments வர வரைக்கும் மொக்க போட்டோமா,அப்புறம் அந்த டிரஸ் பத்தி பெருமை பேசி முடிச்சா  தான் நமக்கு சந்தோஷம்... இந்த மாதிரி விசேஷ நாட்கள்ல கூட  ஒருவேளை  சாப்பாடு மட்டும் சாப்டுற ஆதரவற்ற குழந்தைங்களும் நமக்கு பக்கத்துல தான்  இருக்காங்க அவங்களுக்கு எதாவது நல்லது பண்ணலாம்னு சொன்னா....... ஓஓ...ஹோ ... அப்டியா ..!!! அதுக்கு நான் என்ன பண்ணட்டும் ? அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? நான் சம்பாதிக்கிறேன்  நான் செலவு பண்றேன்... நல்ல பதில் ...      

      
            ஆப்பிரிக்கால   பட்டாம்பூச்சி சிறகடிச்சா, அமெரிக்கால புயல் வரும்னு   "CHAOS THEORY " , "BUTTERFLY EFFECT " நு ஏதாவது  கதை சொல்லி ஏமாத்துனா வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியாம பார்ப்போம் .!! ஆனா, தஞ்சாவூர்ல  ஒரு விவசாயி விதைக்குற நெல்லுக்கும் சென்னை சரவணபவன் ல  "ஆஹா ரொம்ப நன்னா இருக்கு" நு சொல்லிண்டு சப்புக் கொட்டி  நாம   சாப்பிடுற சாப்பாட்டுக்கும்  சம்பந்தம் இருக்குனு சொன்னா       "I see..!! ,Hey, are you joking ??" நு  சொல்ற அறிவுஜீவிகள் அதிகம் ...

           நாம குடிக்கற பாயாசத்துல முந்திரி பருப்பு இல்லாதது நமக்கு குறையா இருக்கு . மூட்டை மூட்டையா முந்தரிய  வெளைய  வச்ச கடலூர்  மக்கள் "தானே" புயலுக்கு அப்புறம் தடம் தெரியாம இருக்காங்க .. அவுங்க குழந்தைங்க இன்னைக்கு ஆதரவற்றோர் விடுதிகள்ல....

            தீபவளினா பட்டாசு வாங்கி வெடிச்சா தான் நமக்கு பெருமை , பக்கத்துக்கு வீட்டுக்காரன் 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கிட்டா,
நாம கொறஞ்சது 2500 ரூபாய்க்காவது பட்டாசு வாங்குனாத்தான் கெளரவம் ... இல்லைனா வரலாறு நம்மள பத்தி தப்பா பேசும்ல ...!! நம்ம வெடிக்குற பட்டாச தயாரிச்ச பாதி பேர் இப்போ உயிரோட இல்ல , அவுங்க குழந்தைங்களும் இன்னைக்கு ஆதரவு இல்லாம தான் இருக்காங்க ....


            அதுக்கு நாம என்ன பண்ண  முடியும் ..!! நாம தான் சென்னைல safe -ah  இருக்கோம்ல .நம்ம வீடு, நம்ம குழந்தைங்க நல்லா இருக்காங்க அது போதும் நமக்கு , யார் எப்படி போனா நமக்கு என்ன ??.... அட நல்லவங்களே , நாளைக்கே 7.1  ரிக்டர்ல ஒரு பூகம்பம் வந்தா நமக்கும் அதே நிலைமை தான் ...கோடி கோடியா பணம் வச்சிருந்தாலும் பசிச்சா அந்த பேப்பர யாராலும் சாப்பிட முடியாது, இல்லாதவங்களுக்கும்  கொஞ்சம் கொடுங்க கொறஞ்சிட மாட்டோம் ..



            கிரிக்கெட் , சாய் பாபா , நித்யானந்தா , திருப்பதி உண்டியல் ,பியுட்டி பார்லர்  , சினிமா ,டாஸ்மாக்  இப்படி நல்ல விஷயங்களுக்காக உதவிக் கரம் நீட்டுற நீங்க, முடிஞ்சா ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உங்க உதவிக் கரங்கள நீட்டுங்க......





Courtesy :  Photographer ELISE JACOB (HARD RAIN PROJECT)

No comments:

Post a Comment