Friday, January 7, 2011

இவங்க இப்படித்தான்...........


சொல்லிக்கொண்டே போகலாம் அதன் அழகைப்பற்றி!!!!!!..... மாலை நேரம் அலை மோதும் கடற்கரை !! எதோ ஓர் சிந்தனையில் நான் , சிறு அழுகுரல் என் காதுகளை எட்டியது திரும்பியதும் சிறுவன் அழுதுகொண்டிருந்தான் "ஏன்பா அழுறனு கேட்டா இன்னும் அழுவானோனு நெனச்சிட்டே " அதையும் கேட்டுட்டேன் அப்போ தான் இன்னும் அழுதான் .. வாக்கிங் வந்த பெரியவர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே போனார் ... ம்ம்ம் இது ஒன்றும் எனக்கு புதிதல்ல "கண்ணா உன் பேர் என்ன ? பாரு நீ அழுறதால என்ன தப்பா நெனைக்குறாங்க " அவன் குரலில் சற்று தொய்வு, ஐந்தாறு நிமிடங்கள் கடந்தன .... மீண்டும் அழ தொடங்கினான் ,, "அட என்னனு சொல்லு பாத்துக்கலாம் " அவன் முதல் வார்த்தை "அவ என் வீட்ட இடிசிட்டா " என்னது இது? இப்போ வீடு கட்டி தர சொல்லுவான் போலன்னு சற்று தயக்கத்துடன் யாருன்னு சொல்லுப்பா ,, அவன் கை விரல் ஒரு சிறுமியை காட்டியது , அவன் தோழியாம் அது மணல் வீடு . நான் சிரித்துக்கொண்டே சரி விடு நம்ம புது வீடு கட்டிக்கலாம் என்றேன் .. ம்ஹும் எனக்கு அந்த வீடு தான் வேணும் என்றான் "ஆஹா இன்னைக்கு பொழுது இவன்கூட தானான்னு ? நெனச்சிக்கிட்டே " அவனை சமாளிக்க பார்த்தேன்..........................................முடியல :(


சிறுவர்கள், காதலர்கள் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ண போனா உடையறது நம்ம மூக்குதான் .. மாறி மாறி நம்மகிட்ட குறைகளை சொல்லுவாங்க கடைசியில ஒண்ணா இருப்பாங்க .. இப்போ எப்படி சேந்திங்க , ஏன் சேந்திங்க-ன்னு ? கேக்கவே முடியாது அப்படி ஏதும் கேட்டுட்டா "எல்லா பிரச்சனையும் உன்னாலதான்" ன்னு சொல்லுவாங்க , இது தான் நேரம்கிறது :( அங்க நான் எதுவும் சொல்ல முடியல.... சரி அழாதப்பா சாக்லேட் வாங்கித்தரேன். பக்கத்திலிருந்த கடையில் டைரி மில்க் சாக்லேட் வாங்கி அவன் கையில் அழுத்தினேன் அப்போதான் அழுகையை நிறுத்தினான் ஸ்ருதிக்கு சாக்லேட் ? ன்னு கேட்டான் அவன் கண்களில் ஏக்கம் "அடப்பாவி நானே இதுவரைக்கும் ரெண்டு சாக்லேட் தான் கொடுத்திருக்கிறேன் நீ பீல் பண்றத பார்த்தா அவ இல்லாம சாக்லேட் சாப்ட மாட்ட போலிருக்கே? ன்னு " மனசுக்குள்ளேயே நெனச்சிக்கிட்டு ....... அவ தான் உன்னோட வீட்ட இடிச்சிட்டாலே ? ன்னு கேட்டேன் , அவன் கண்களில் இன்னும் ஏக்கம் .. அவன் மறு கையில் இன்னொரு சாக்லேட் வாங்கி வைத்தேன் .கண் மூடி திறப்பதற்குள் அவன் அவளிடம் சென்றான் அவன் பெயர் கிஷோர் படிப்பது UKG ... அவனுக்கு ஏழாம் அறிவு !!!!! ஆறறிவு இருக்கும் நம்மில் பலர் ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்காக இன்னும் எதிரிகளைப் போலவே அலட்டிகுறாங்க!!!!!
இங்க இவங்களுக்கு நான் எந்த பஞ்சாயத்தும் பன்னல இருந்தாலும் உடைந்தது என் மூக்கு தான் ..... இருக்கட்டும் "குழந்தையும் தெய்வமும் ஒன்று" ம்ம்ம் இவங்க இப்படிதான் ... :)