Sunday, December 23, 2012

கர்நாடக இசைக்கலைஞர்கள் Vs இசைக்கொலைஞர்கள்


         "கர்நாடக இசை கேட்டேள்னா  மன அமைதி கிட்டும், மெய்மறந்து போய்டுவேள் " இப்படி யாரோ சொன்னதக்  கேட்ட  ரவீந்தர்   .! அடுத்த நாளில் இருந்து கர்நாடக இசையில் மூழ்கலானான் .. நாட்கள் நகர்ந்தன, அவன் காதுகளை எட்டிய இசை மனதை மட்டும் எட்டவேஇல்லை ....!!!, இசைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்னு மனச தேற்றும் போது..." i pod ல கேட்டேள்னா எப்படி???. சபால பாடுறச்ச கேட்டேள்னா தானே நன்னா இருக்கும்னு " மறுபடியும் முனுமுக்க , சரி  கேட்டுத்தான் பாப்போம்னு முடிவெடுத்தான் ..............


           மார்கழி வந்தது..!! இசைக் கலவரங்கள் செய்யும் கூட்டங்கள் கூடி கும்மியடிக்கும் சபாக்களுக்கு பஞ்சமில்லாமல் போனது ...

                  சபாவின் மூன்றாவது வரிசையில் ,இசையின் ஆர்வ மிகுதியில்  இருக்கையின் நுனியில் ரவீந்தர்    .. "சந்தான கோபாலா......... னு  கணீர்  குரலுடன் 'வகுளாபரணம்' ராகத்துல கலவரம் பண்ண ஆரம்பிச்ச பெரியவர் சுமார்  கால் மணி நேரம் வரை  முக பாவனைகள் காட்டி முன் வரிசைக்காரர்களை கதறவிட்டார் .. பதறிப் போன ரவீந்தர்..!!, நடையைக் கட்ட நினைக்கும் வேளையில்  , "அடுத்ததாக செல்வி பிரக்சித்தா வின் இசைமழை " னு ஸ்பீக்கர் அலறியதைக் கேட்டவுடன்.... அவள்  இசை மழையில் நனைந்தால் என்ன ?? கரைந்தா போயிடுவோம்னு அவன் மனசாட்சி சொன்னது ...

           "செல்வி பிரக்சித்தா..... B.E (ECE ) முடித்தவள் ,  MBBS சீட்  கிடைத்தும்  அதை ஏற்காமல் இசைக்காகவே தனது CAREER ஐ விட்டுக் கொடுத்தவள், அவள் வளர்க்கும் நாய்க்குட்டிக்கும்  இசை ஞானம் இருக்கும் என்றால்..!!!! அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .. இவள் எங்களது  மகள் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்".... என அவளது அப்பா குடுத்த பில்ட் அப்க்கு அளவே இல்லை ..... சுயபுராணம் முடிந்தவுடன்,  "அபேரி "  ராகத்துல பாடத் தொடங்கினால்   செல்வி பிரக்சித்தா..!!!   சொல்லிக்கொள்ளும்படி அப்படி ஒரு இசை ஞானம் அவளுக்கு இருப்பதாக தெரியவில்லை....  அவள் பாடியது அபேரி ராகம்னா??    "மீண்டும் கோகிலா"   படத்துல  'சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம்'  பாட்டு என்ன ராகம்னு புரியாமல்  குழம்பினான் ரவீந்தர் ...  மானவதி  ராகம், சரசாங்கி ராகம்னு .... பூசி மொழுகி அவள் முடிக்கும்  தருணத்தில்,  ஒரு துண்டுச்சீட்டு அவளிடம் வந்தடைந்தது அதில்  "meesiq ல  எப்படி உங்களுக்கு ஆர்வம் வந்தது??  அத பத்தி  கொஞ்சம் சொல்லுங்கன்னு" ஒரு request-ஆம்.... அவள்  மிக ஆர்வத்துடன் பதிலளிக்கத் தொடங்கினால், "நான்  ரெண்டு வயசா  இருக்கறச்சவே  பாட ஆரம்பிச்சுட்டேன்...!! எல்லாரும் சொல்லுவா குழந்தைக்கு Tendency இருக்கு I mean towards music, நல்ல future இருக்குனு  "  இப்படி நீண்டது செல்வி பிரக்சித்தாவின் சுயபுராணம்   PART 2... அவள் பாடுனது கால் மணி நேரம் பதில் சொன்னது அரை மணி நேரம் ....!!!!!!!!!!!

              மும்மூர்த்திகள் , ஆதி மும்மூர்த்திகள் இயற்றிய இசை, இன்று இவர்களைப்போல சில தற்பெருமைவாதிகள் , தரமில்லாத கலைஞர்களிடம் பிடியில் சிக்கித் தவிக்கிறது .......இவர்களை  இசைக்கலைஞர்கள்  என்பதைவிட இசைக்கொலைஞர்கள் என்றே சொல்லணும்