Tuesday, November 6, 2012

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு..!!!

சூப்பர்  ஸ்டார்  யாருன்னு கேட்டா சின்ன குழந்தை கூட சொல்லும், ரஜினிகாந்த்..!!!  தமிழ் சினிமாவின் தாரக மந்திரம் , வருங்கால   இந்திய பிரதமர் , எளிமையின் சிகரம் , இவரு பேரக் கேட்டாலே சும்மா அதிரும் .. இப்படி ஓவரா பில்டப் பண்ணும் ரசிகர்களின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல ..

1975இல்  இருந்து, தமிழ் நாட்டுக்க்காகவும்   , தமிழ் மக்களின்   நலனுக்காகவும் வாழும் ஒரே மனிதர்னா அவர் ரஜினிதான் ..  காவேரி பிரச்சனையாகட்டும் காஷ்மீர்  பிரச்சனையாகட்டும் கருத்து சொல்ல மட்டும்  முதல் வரிசையில நிப்பாரு ... 2002 ல தமிழ் நாட்டுக்கு காவேரி நீர திறந்துவிட முடியாதுன்னு கர்நாடகா சொன்னப்ப , நதிநீர் இணைப்புக்கு  என் சொந்த பணம் ஒரு கோடி  தரேன்னு அரசியல்வாதிங்க மாதிரி அறிக்கை மட்டும் விட்டாரு, இப்போ 2012  இன்னும் அந்த ஒரு கோடிய கொடுத்த மாதிரி தெரியல . பாவம்  ரஜினிகிட்ட  காசு  இல்ல போலும் ......

எந்த கட்சி ஆட்சிக்கு வருமோ, அந்த கட்சிக்கு  அதரவுனு  வெள்ளைப் புறாக்கள பறக்க விடுவார் .. 'ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனதற்கும்  ரஜினிதான் காரணம்'னு அவுங்க ரசிகர்கள் பேனர் வைச்சத பாத்து , என்ன நானே ஒரு முறை கிள்ளி பாத்தேன் ...  "அ .தி .மு .க  மட்டும் திரும்ப  ஆட்சிக்கு வந்தா  கடவுளால கூட தமிழ்நாட்ட காப்பாத்த முடியாது"ன்னு 1996 ல சொன்னாரு ,, அவரே 2011ல  "தமிழ்நாட்ட காப்பாத்திடீங்க" நு அ .தி .மு .க  ஆட்சிக்கு வந்ததும்  வெள்ளைக் கொடி காட்டுனத யாரும் மறக்கல ..ஒகேனக்கல் காவேரி நீர் பிரச்சனை வந்ததும்  கன்னட தலைவர்கள திட்டினார்.. "உன் படம் கர்நாடக தியேட்டர்ல ஓடாது" நு அவுங்க கருப்புக் கொடி காட்டுனதும்   .. மறுபடியும் வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்தார் ... பொழைக்கத் தெரிஞ்ச புள்ள ... நீங்க நல்ல வருவீங்க சார் ...

               "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே " அடிக்கடி சொல்ற டயலாக் ... ரஜினி  இந்த டயலாக் சொல்லும் போது "என்னை வாழ வைத்த , வாழ  வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் பலியாடுகளே "நு அதன் உள் அர்தத்த புரிஞ்சிக்கணும் ...  அவர் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு வீதம்   26 கோடி , 45 கோடின்னு சம்பளம் வாங்கிட்டு ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் ராகவேந்தர் கோயிலுக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக  10 கோடி கொடுப்பார் இந்த கர்ண பிரபு .. கண்ணுக்கு தெரியுற  மக்களுக்கு அவர் கடனாகூட  ஒரு ரூபா தர மாட்டார் ... சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை விபத்தப்போ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக  40 லட்ச ரூபாய்க்கு மருந்து பொருட்கள கொடுத்த மம்முட்டிக்கு  இருந்த அக்கறை கூட ரஜினிக்கு இல்ல ... அதே ரஜினி குணமாகி சிங்கப்பூர் ல இருந்து வந்தப்ப பாக்கப் போன ரசிகர்களுக்கு போலீஸ் தடியடியும் , அடிப்பட்டு ரத்தம் கொட்டுனதும்தான் மிச்சம் ..


ரஜினி இன்னும் நிறைய நல்லது செஞ்சிருக்கார் , இன்னும் செய்வார் ......


 ரஜினி படம் ரிலிஸ் ஆனா போதும் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ண பல  முட்டாள்கள் கூட்டம் முளைக்கும் , அட முட்டாள்களே ..!!!  உங்க தலைவன் பேர சொல்லி அந்த பால , பட்டினியால சாகுற குழந்தைங்களுக்காக குடுத்தா உங்கள என்ன போலீஸ் புடிக்குமா ???

                        வார்த்தைக்கு வார்த்தை"தலைவா"ன்னு சொல்லும் விசிறிகளுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமில்லை ... ரஜினி தலைவர்னு சொன்னா  மக்களுக்காகவே எளிமையா வாழ்ந்த  காமராஜர் , பிரபாகரன் , சேகுவேரா , எம். ஜி. ஆர், இவுங்கல்லாம் யாரு ???...

Thursday, November 1, 2012

சுருங்கிய இதயங்கள் ..!!!!

         தீபாவளி ,நியூ இயர் , பர்த்டே,கிறிஸ்துமஸ் ,ரம்ஜான் , இப்படி  எது வந்தாலும் நாலு புது டிரஸ் வாங்கி  போட்டோமா, பத்து பதினஞ்சு போட்டோஸ் எடுத்தோமா, அத Facebook ல upload   பன்னுனமா 50 likes ,100  comments வர வரைக்கும் மொக்க போட்டோமா,அப்புறம் அந்த டிரஸ் பத்தி பெருமை பேசி முடிச்சா  தான் நமக்கு சந்தோஷம்... இந்த மாதிரி விசேஷ நாட்கள்ல கூட  ஒருவேளை  சாப்பாடு மட்டும் சாப்டுற ஆதரவற்ற குழந்தைங்களும் நமக்கு பக்கத்துல தான்  இருக்காங்க அவங்களுக்கு எதாவது நல்லது பண்ணலாம்னு சொன்னா....... ஓஓ...ஹோ ... அப்டியா ..!!! அதுக்கு நான் என்ன பண்ணட்டும் ? அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? நான் சம்பாதிக்கிறேன்  நான் செலவு பண்றேன்... நல்ல பதில் ...      

      
            ஆப்பிரிக்கால   பட்டாம்பூச்சி சிறகடிச்சா, அமெரிக்கால புயல் வரும்னு   "CHAOS THEORY " , "BUTTERFLY EFFECT " நு ஏதாவது  கதை சொல்லி ஏமாத்துனா வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியாம பார்ப்போம் .!! ஆனா, தஞ்சாவூர்ல  ஒரு விவசாயி விதைக்குற நெல்லுக்கும் சென்னை சரவணபவன் ல  "ஆஹா ரொம்ப நன்னா இருக்கு" நு சொல்லிண்டு சப்புக் கொட்டி  நாம   சாப்பிடுற சாப்பாட்டுக்கும்  சம்பந்தம் இருக்குனு சொன்னா       "I see..!! ,Hey, are you joking ??" நு  சொல்ற அறிவுஜீவிகள் அதிகம் ...

           நாம குடிக்கற பாயாசத்துல முந்திரி பருப்பு இல்லாதது நமக்கு குறையா இருக்கு . மூட்டை மூட்டையா முந்தரிய  வெளைய  வச்ச கடலூர்  மக்கள் "தானே" புயலுக்கு அப்புறம் தடம் தெரியாம இருக்காங்க .. அவுங்க குழந்தைங்க இன்னைக்கு ஆதரவற்றோர் விடுதிகள்ல....

            தீபவளினா பட்டாசு வாங்கி வெடிச்சா தான் நமக்கு பெருமை , பக்கத்துக்கு வீட்டுக்காரன் 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கிட்டா,
நாம கொறஞ்சது 2500 ரூபாய்க்காவது பட்டாசு வாங்குனாத்தான் கெளரவம் ... இல்லைனா வரலாறு நம்மள பத்தி தப்பா பேசும்ல ...!! நம்ம வெடிக்குற பட்டாச தயாரிச்ச பாதி பேர் இப்போ உயிரோட இல்ல , அவுங்க குழந்தைங்களும் இன்னைக்கு ஆதரவு இல்லாம தான் இருக்காங்க ....


            அதுக்கு நாம என்ன பண்ண  முடியும் ..!! நாம தான் சென்னைல safe -ah  இருக்கோம்ல .நம்ம வீடு, நம்ம குழந்தைங்க நல்லா இருக்காங்க அது போதும் நமக்கு , யார் எப்படி போனா நமக்கு என்ன ??.... அட நல்லவங்களே , நாளைக்கே 7.1  ரிக்டர்ல ஒரு பூகம்பம் வந்தா நமக்கும் அதே நிலைமை தான் ...கோடி கோடியா பணம் வச்சிருந்தாலும் பசிச்சா அந்த பேப்பர யாராலும் சாப்பிட முடியாது, இல்லாதவங்களுக்கும்  கொஞ்சம் கொடுங்க கொறஞ்சிட மாட்டோம் ..



            கிரிக்கெட் , சாய் பாபா , நித்யானந்தா , திருப்பதி உண்டியல் ,பியுட்டி பார்லர்  , சினிமா ,டாஸ்மாக்  இப்படி நல்ல விஷயங்களுக்காக உதவிக் கரம் நீட்டுற நீங்க, முடிஞ்சா ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உங்க உதவிக் கரங்கள நீட்டுங்க......





Courtesy :  Photographer ELISE JACOB (HARD RAIN PROJECT)