Thursday, April 11, 2013

தமிழர்களே டமிலர்களே ..!!!!

*அன்று "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என முழக்கமிட்டாய் , இன்று A for Apple , B for Ball .....D for டாடி ..... M for மம்மி  ......T for டமில்.... எனும் அளவிற்கு  ஏக போக  வளர்ச்சியடைந்து விட்டாயடா.!!!

*ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டும்தான்  அறிவாளிகள் என்பதை ஆணித்தனமாக நம்புகிறவன்  நீ .!! புரியாமல் போனாலும் ஆங்கில செய்தித்தாள்களை வாங்கி சுருட்டி கையில் வைத்துக்கொள்வதும் , அடுத்தவர்களுக்காக ஆங்கிலப் படங்கள் பார்ப்பதையும்  வாடிக்கையாக்கி விட்டாய்..!!! 

*அன்று  ஆரியத்தால் அடிமைப்பட்டுக் கிடந்த நீ.... இன்று திராவிட சக்திகளின் பசிக்கு இறையாகிக்கொண்டிருக்கிறாயடா ..!!!

*திராவிடம், தமிழ் தேசியம் என யார் முழக்கமிட்டாலும் அவர்களின் பின்னால் ஆட்டு மந்தை போல சென்றுவிடுவாய்  ,காசு வாங்கிக்கொண்டு  மாறி மாறி வாக்களித்து உன் சனநாயக கடைமையை தவறாமல் செய்து முடிப்பாய்..!!!

* உழைத்து உண்ணாமல் இலவசத்திற்காக உன் அடுத்த சந்ததிகளையும் சேர்த்து அரசியல் கட்சிகளிடம் அடமானம் வைத்துவிட்டாய்..!!!

*முன்பெல்லாம் புத்தாண்டுக்கு எந்த துணி உடுத்துவது என்றுதான் குழம்புவாய்  , இப்போது புத்தாண்டு  தை 1 ஆ , இல்லை சித்திரை 1 ஆ என்பதிலேயே உனக்கு குழப்பம்..!!!

*வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டு படித்த படிப்புக்கு வேலை இல்லை என புலம்புவாய் , வடமாநிலத்திலிருந்து  வந்தவர்கள் இங்கு  பானி பூரி விற்று முன்னேறும்போது  "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என முழங்குவாய்..!!!

*அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தாய், இன்று சங்கம் வைத்து  ஜா(தீ )தி வளர்த்துக் கொண்டிருக்கிறாய்..!!!

*உலகில் எங்கு அதர்மம் தலை தூக்கினாலும் நீதி வேண்டி facebook லும் , twitter ரிலும்..." facebook போராளியாக" போராடுவாய் ,பக்கத்து வீடு பற்றி எரியும் போது like செய்துவிட்டு IPL பார்த்து ரசிப்பாய்..!!!

*அன்று pepsi ,coco cola என வந்தாரை மட்டும்  வாழ வைத்தாய் , இன்று TASMAC ஐயும் வசூல் சாதனை செய்ய வைத்து "தமிழ்க்  குடிமகன்" என்பதில் பெருமையடைகிறாயடா ..!!!

*ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரண்டே ஆண்டில் ஒரு கோடி ரூபாய் தருகிறோம் என்று விளம்பரம் கொடுத்தால் கூட சிறிதும் சிந்திக்காமல், கடன் வாங்கியாவது 10 ஆயிரம் கட்டிவிட்டு வருவாயடா..!!!

*தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்று வீர வசனங்கள் பேசி  படத்தில் நடித்தவனுக்கு நிஜ வாழ்க்கையிலும் பாலபிஷேகம் செய்து தலைவனாக்கி அழகு பார்ப்பாயடா  தமிலா ..!!!
                                                                   ---- வாழ்க உன் புகழ்  பல்லாண்டு ..!!!!

Thursday, January 24, 2013

இந்தியக் குடியரசு ????

                 பழகிப் போன  ஜனவரி 25 ம் தேதி தலைப்புச் செய்தி  " இந்தியா தனது 64 வது குடியரசு தினத்தை  நாளை கொண்டாட உள்ளது, இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன . குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் , மேலும் அவர் ஆற்றிய குடியரசு தின வாழ்த்து உரையில் ......."    "மை டியர்  சிட்டிசன்ஸ் ஆன் தி இவ் ஆப் அவர் 64 த்து  ரிபப்ளிக் டே ஐ எக்ஷ்டெண்ட் மை வார்ம் கிரீடிங்க்ஸ் டு ஆல் ஆப் யூ அக்ராஸ்  தி கன்ட்ரி அண்ட் ஆல்சோ டு தோஸ் லிவிங் அப்ராடு"...... இப்படியே   சுமார் கால் மணி நேரத்துக்கு  ஆத்து ஆத்துன்னு ஆத்துவாங்க . கடைசியா  ஜெய்ஹிந்த் சொல்லி சுபம் போடுவாங்க ...

                 இந்த சொற்பொழிவையும் போன வருட சொற்பொழிவையும் ஒப்பிட்டால் "63வது" குடியரசு  மற்றும் "64வது"  குடியரசு என எண்ணிக்கை மட்டும்தான் வேறுபடும் மத்தபடி அவுங்க சொல்லற ஸ்கிரிப்ட் இன்னும் இருபது வருடம் ஆனாலும் மாறவே மாறாது . என்ன ...நடுவுல நடுவுல  "மை டியர் பெல்லோ  சிட்டிசன் "  "சந்திராயன் 2"   " நியுக்ளியர் ப்ராஜெக்ட் " னு  போட்டுக்குவாங்க ..

               அடுத்த வருடம் இதே மாதிரி பேசுறதுக்கு மக்கள் வரிப்பணத்தில இருந்து   மாசம் மாசம் ஒன்றரை லட்சம் சம்பளமா கொடுத்திடனும் , மேற்படி அரசாங்க சலுகைகள் வேற .. தனி விமானம் எந்நேரமும் தயார் நிலையில் ... போன குடியரசு தலைவர்  பாரின் டூர்  போயிட்டு  வந்த செலவு மட்டும் 205 கோடினா  பாருங்களேன் எப்படி நாட்டுக்காக ஓடி ஓடி உழைச்சிருக்காங்கன்னு .."கத்தி போய் வாள் வந்த கதையா"  இந்த குடியரசு தலைவர் 1 மணி நேரம் ஓய்வெடுக்க ஒன்றரை கோடி செலவு பண்றாங்க ....  ஒரு நாளைக்கு 70 கிலோமீட்டருக்கு மேல அலைஞ்சு மார்க்கெட்டிங் பண்ற  எக்சிகுடிவ்க்கு கம்பெனி தர சம்பளம் மாதம்  20000 ரூபாய்  இதற்க்கு பர்பார்மன்ஸ் பத்துலன்னு எக்ஸ்ட்ரா டோஸ் வேற ...அப்புறம் எங்க SALARY  HIKE பத்தி பேசுறது  ... ஆனால் பாருங்க உழைத்து உழைத்து களைத்துப்  போன குடியரசு தலைவருக்கு நாம அந்த கஷ்டத்த கொடுக்கல . 50000 ரூபாய் சம்பளம் பத்தாதுன்னு 300% HIKE அவுங்களுக்கு அவுங்களே குடுத்து 150000 ரூபாய் சம்பளம் வாங்கிகுறாங்க .

               இதே மாதிரி மாநிலத்துக்கு ஒரு ஆளுநர்கள் இருக்காங்க,பாரின் டூர் மட்டும் அதிகம் போறது இல்ல மத்தபடி இந்தியாவுக்குள்ள எங்க  ேனுனாலும் ட்ரிப் போகலாம் இவர்களின் முக்கிய வேலை தனியார் கல்லுரி மாணவர்களுக்கு பட்டமளித்து தனியார் கல்லூரிகளின் மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுவது...
          100 வது குடியரசு தினம் வந்தாலும் மேல் சிகிச்சைக்கு ஆட்சியாளர்கள் பாரின்தான் போவாங்க அடித்தட்டு மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லல்படுவாங்க . நிதி நெருக்கடியாகட்டும் ,அவசர நிலை பிரகடனமாகட்டும் சிக்கி சின்னாபின்னமாவது  நாட்டு மக்கள்  மட்டுமே ...

              Equality ,Justice,  Liberty,Fraternity   பெருசா ஒன்னும் இல்லைனாலும் ஒரு நாள் பொது விடுமுறை அப்புறம்   இந்த மாதிரி ஆதங்கங்கள சொல்றதுக்கு அனுமதி இருக்கே.! அதுக்காவது இந்தியா குடியரசு நாடுன்னு சொல்லணும்

Wednesday, January 2, 2013

சமூக அவலங்கள் ..

             









                                                          அரசியலுக்கு அப்பாற்பட்டு,தலைநகர் டெல்லியை, தலை குனிய வைத்த பாலியல் கொடுஞ்செயல் ,எதோ முதல் முறையாக  நடந்தது போல சித்தரித்த மீடியாக்கள் ..!! , இதற்க்கு முன் பெண்களுக்கு எதிராக நடந்த பல கொடுஞ்செயல்களை மறைத்துவிட்டன .டெல்லிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்கள் ,ஒரு சில சமூக ஆர்வலர்களுக்கு  மற்ற மாநிலங்களை நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை.இவர்களின் இந்த இலவச  சேவையும் அடுத்த செய்தி கிடைக்கும் வரை மட்டுமே...

               கிரிக்கெட் , சினிமாக்களுக்கு மட்டும் ஒன்று  கூடும் இந்திய மக்கள் சற்று மாறுபட்டு  1947 ம் ஆண்டிற்கு பிறகு தெருக்களில் வந்து போராடியது ஆட்சியாளர்களிடையே கிலியை ஏற்படுத்தியது. அனைத்து கண்டனக் குரல்களும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சொல்ல..!! மறுபுறம் இதே போன்ற வன்மங்கள்  தொடர்கதையாகவே உள்ளன . குற்றவாளிகளை தண்டித்துவிட்டால் இனி இது போன்ற பிரச்சனைகள் எழாது என்பது , நடைபாதையில் உள்ள முட்களில் ஒன்று காலணியையும் தாண்டி  நம் பாதத்தில் பட்டு ரத்தம் வடிந்தால் , குத்திய முள்ளை தீயிலிட்டு கொளுத்தினால் ..! இனி கடக்கப் போகும் பாதையில் உள்ள முட்கள் நம் பாதங்களில் படாது என்பதைப்போல் கேலிக்கூத்தாக உள்ளது .


               எல்லாப் பிரச்சனைகளுக்கும் சமூக  அவலங்கள்தான் துணை போகின்றன  . மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கம் ,மாறாக  மதுபானக் கடைகளை திறந்து , திறம்பட நடத்துகிறது . பெண்களை போகப் பொருளாக சித்தரித்து, மீடியாக்கள் முதல் பல முதலாளிகள்  வரை  கல்லாக் கட்டுகின்றனர் .மக்களும் சளைத்தவர்கள் அல்ல , குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பெற்றோர்களே  காசு பார்க்கும்  மீடியாக்களிடம் விட்டு சீரழித்து விடுகின்றனர் . "வாடா வாடா பையா என் வாசல் வந்து போடா " ,"சக்கலக்க பேபி சக்கலக்க பேபி லுக்கு விடத் தோணலையா ??? ", "ஆசையைக் காத்துல தூது விட்டு " இது போன்ற பாடல்களை Airtel super singer junior இல் பெண் குழந்தைகளை  பாட வைத்ததுமில்லாமல்  "இன்னும்   கொஞ்சம் உணர்ச்சி பொங்க பாடியிருந்தால்  நல்லா  இருந்திருக்கும்"   என குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள் இந்த சமூக அக்கறை கொண்ட மீடியாக்கள் .. அதற்கு துணை போகும் பெற்றோர்கள்   "அடுத்த முறை நல்லா பாடுவா , இந்த முறை செலக்ட் பண்ணிடுங்க "   என்று பிச்சை கேட்கிறார்கள் ...தவறுகள் இந்த சமூகத்திடம் தான் உள்ளது...

               இலங்கையில் பாலியல் வன்முறைகள் , இனப் படுகொலைகள்  நடந்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்த மீடியாக்களும்,மக்களும்  இன்றாவது போராட முன்வந்தார்களே அதுவே, இவர்கள்  பெண்களுக்கு செய்யும்  பெரிய தொண்டு ..... சிலர்  என்ன நடந்தால் நமக்கென்ன என்று  சமூக வலைதளங்களில் தங்களது  போடோஸ் போட்டுவிட்டு ,  "Awwwww SO sweetttttttttttttttttt  ,Very Cuteeeeeeeeeeeeeee  ,Very Nice NA ??? என கெக்கப் பிக்கே என்று  விளம்பரம் தேடுவதிலேயே குறியாய் இருக்கின்றனர், இதுதான் இவர்களின் மேலான சமூக அக்கறை .  . இன்னும் சிலர் இதையும் அரசியலாக்கி காசு பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டனர் ..


                எது எப்படியோ இந்திய மீனவர்கள் , தமிழக மீனவர்கள் என பிரித்தாளும் "மாண்புமிகு இந்திய அரசு" ,பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும் போது இந்தியப் பெண்களுக்கு , தமிழக பெண்களுக்கு என வெவ்வேறு சட்டங்கள் இயற்றாமல் இருந்தால்..!!! கோடான கோடி நன்றிகள் ...