Thursday, January 24, 2013

இந்தியக் குடியரசு ????

                 பழகிப் போன  ஜனவரி 25 ம் தேதி தலைப்புச் செய்தி  " இந்தியா தனது 64 வது குடியரசு தினத்தை  நாளை கொண்டாட உள்ளது, இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன . குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் , மேலும் அவர் ஆற்றிய குடியரசு தின வாழ்த்து உரையில் ......."    "மை டியர்  சிட்டிசன்ஸ் ஆன் தி இவ் ஆப் அவர் 64 த்து  ரிபப்ளிக் டே ஐ எக்ஷ்டெண்ட் மை வார்ம் கிரீடிங்க்ஸ் டு ஆல் ஆப் யூ அக்ராஸ்  தி கன்ட்ரி அண்ட் ஆல்சோ டு தோஸ் லிவிங் அப்ராடு"...... இப்படியே   சுமார் கால் மணி நேரத்துக்கு  ஆத்து ஆத்துன்னு ஆத்துவாங்க . கடைசியா  ஜெய்ஹிந்த் சொல்லி சுபம் போடுவாங்க ...

                 இந்த சொற்பொழிவையும் போன வருட சொற்பொழிவையும் ஒப்பிட்டால் "63வது" குடியரசு  மற்றும் "64வது"  குடியரசு என எண்ணிக்கை மட்டும்தான் வேறுபடும் மத்தபடி அவுங்க சொல்லற ஸ்கிரிப்ட் இன்னும் இருபது வருடம் ஆனாலும் மாறவே மாறாது . என்ன ...நடுவுல நடுவுல  "மை டியர் பெல்லோ  சிட்டிசன் "  "சந்திராயன் 2"   " நியுக்ளியர் ப்ராஜெக்ட் " னு  போட்டுக்குவாங்க ..

               அடுத்த வருடம் இதே மாதிரி பேசுறதுக்கு மக்கள் வரிப்பணத்தில இருந்து   மாசம் மாசம் ஒன்றரை லட்சம் சம்பளமா கொடுத்திடனும் , மேற்படி அரசாங்க சலுகைகள் வேற .. தனி விமானம் எந்நேரமும் தயார் நிலையில் ... போன குடியரசு தலைவர்  பாரின் டூர்  போயிட்டு  வந்த செலவு மட்டும் 205 கோடினா  பாருங்களேன் எப்படி நாட்டுக்காக ஓடி ஓடி உழைச்சிருக்காங்கன்னு .."கத்தி போய் வாள் வந்த கதையா"  இந்த குடியரசு தலைவர் 1 மணி நேரம் ஓய்வெடுக்க ஒன்றரை கோடி செலவு பண்றாங்க ....  ஒரு நாளைக்கு 70 கிலோமீட்டருக்கு மேல அலைஞ்சு மார்க்கெட்டிங் பண்ற  எக்சிகுடிவ்க்கு கம்பெனி தர சம்பளம் மாதம்  20000 ரூபாய்  இதற்க்கு பர்பார்மன்ஸ் பத்துலன்னு எக்ஸ்ட்ரா டோஸ் வேற ...அப்புறம் எங்க SALARY  HIKE பத்தி பேசுறது  ... ஆனால் பாருங்க உழைத்து உழைத்து களைத்துப்  போன குடியரசு தலைவருக்கு நாம அந்த கஷ்டத்த கொடுக்கல . 50000 ரூபாய் சம்பளம் பத்தாதுன்னு 300% HIKE அவுங்களுக்கு அவுங்களே குடுத்து 150000 ரூபாய் சம்பளம் வாங்கிகுறாங்க .

               இதே மாதிரி மாநிலத்துக்கு ஒரு ஆளுநர்கள் இருக்காங்க,பாரின் டூர் மட்டும் அதிகம் போறது இல்ல மத்தபடி இந்தியாவுக்குள்ள எங்க  ேனுனாலும் ட்ரிப் போகலாம் இவர்களின் முக்கிய வேலை தனியார் கல்லுரி மாணவர்களுக்கு பட்டமளித்து தனியார் கல்லூரிகளின் மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுவது...
          100 வது குடியரசு தினம் வந்தாலும் மேல் சிகிச்சைக்கு ஆட்சியாளர்கள் பாரின்தான் போவாங்க அடித்தட்டு மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட அல்லல்படுவாங்க . நிதி நெருக்கடியாகட்டும் ,அவசர நிலை பிரகடனமாகட்டும் சிக்கி சின்னாபின்னமாவது  நாட்டு மக்கள்  மட்டுமே ...

              Equality ,Justice,  Liberty,Fraternity   பெருசா ஒன்னும் இல்லைனாலும் ஒரு நாள் பொது விடுமுறை அப்புறம்   இந்த மாதிரி ஆதங்கங்கள சொல்றதுக்கு அனுமதி இருக்கே.! அதுக்காவது இந்தியா குடியரசு நாடுன்னு சொல்லணும்

No comments:

Post a Comment