Thursday, March 31, 2011

Tamil Cinema!!!


நடிகர்களையும், நடிகைகளையும் "ஆகா... ஓகோ!" என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் இளைஞர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம்,நடிகைகளுக்கு கோயில் கட்டுவது இதன் உச்சக் கட்டம் . தனக்கு பிடித்த நடிகர், நடிகை நடித்த முதல் காட்சிக்கு அவர் படத்தின் முன் தீப ஆராதனை எல்லாம் செய்கிறார்கள்!!. நம் நாட்டில் 40% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்,இவர்களுக்கு ஒரு வேலை உணவே கேள்விக்குறி!!! இதே நாட்டில் தான் நடிகரின் "கட் அவுட்"க்கு , பால் அபிஷேகம் செய்யப்படுகிறது ... நாலு ஊரில் ரசிகர் மன்றம் இருந்தால்கூட, "அகில உலக" ரசிகர் மன்றம் என்று பெயர் வைப்பார்கள்!!!!

தங்கள் நேரத்தை, பணத்தை, உழைப்பை எல்லாம் இந்த ரசிகர் மன்றத்துக்கு வீணடிப்பார்கள். பிற நாடுகளில் இப்படி இருக்கிறதா? இல்லவே இல்லை!!

மற்ற நாடுகளில் அவர்களுக்கு அவர்கள் தொழில்தான் முக்கியம். அவர்கள் குடும்பம் மனைவி மக்கள்தான் முக்கியம். வீட்டில் சினிமாக்காரர்கள் படமோ, அரசியல் தலைவர்கள் படமோ மாட்டப்பட்டிருக்காது. மாறாக குடும்பப் படம், அவர்களை வளர்த்த அவர்களின் பெற்றோர் படம் இவைதான் இருக்கும், அங்கெல்லாம் வாழ்க்கை திரைப்படமாகிறது. இங்கு திரைப்படத்தை வாழ்க்கையாக்குகிற முயற்சி நடைபெறுகிறது.

சினிமா நடிகர் என்பவர் பஸ் டிரைவரைப் போல, ஓட்டல் சர்வரைப் போல ஒரு தொழில் செய்கிறார், அவ்வளவுதான். ஒரு ஓட்டல் சர்வர் பிரமாதமாக நல்ல காப்பி போட்டுத் தருகிறார் என்று நாம் அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்குகிறோமா? ஒரு பஸ் டிரைவர் மிக நன்றாக ஓட்டுகிறார் என்பதற்காக ஒவ்வொரு முறை பஸ் புறப்படும்போது அவருக்கு மாலை போட்டு தீபம் காட்டி அவரை வழி அனுப்புகிறோமா?

செய்வதில்லை!

திரைப்படங்களில் பொதுவாக வரும் நிகழ்வுகள்:
ஒருவர் தலையில் அடிப்பட்டு பைத்தியமாகத் திரிவார். இடைவேளைக்குப் பிறகு அதே தலையில் இன்னொரு அடிப்பட்டு அவருக்கு பைத்தியம் தெளிந்து விடுமாம். இப்படி பைத்தியக்காரத்தனமான படங்களை பார்க்க வேண்டியது நமது தலைவிதியாகி விட்டது. இன்னும் ஒரு பொதுப்படையான காட்சி. கதாநாயகன், கடத்தப்பட்ட காதல் பெண்ணைத் தேடிப் போகவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவனிடமோ வாகனம் ஏதும் இருக்காது. உடனே ஒரு சைக்கிள்காரனை இடித்துப் போட்டுவிட்டோ அல்லது கார்க்காரனை உருட்டிவிட்டோ அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டு ஓடுவான். இதற்கு ரசிகர்களின் கைத்தட்டும் பலமாக இருக்கும். இப்படிச் செய்வது ஒரு கிரிமினல் குற்றம். இதை உண்மையாகவே செய்கிறவனுக்கு சிறை தண்டனைக் கிடைக்கும். இப்படிப்பட்ட நாயகனைப்போல் அவன் ரசிகனும் நடந்துக் கொண்டால் இந்த சமூகம் என்னாவது?



தமிழ் சினிமாவின் வழக்கமான வசனங்கள்:
1. வயதான அம்மாள் ஒருவர் வாசலில் நின்று கொண்டு, "என் ராசா... நீதான் இந்த கொடுமைய தட்டிக் கேட்கணும்"
2."அய்யா.... என் புள்ளைய திருட்டு கேஸ்லே போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு. விடிய விடிய அடிச்சிருப்பானுங்க போலிருக்கு. குத்துயிரா கிடக்கிறான். பெரிய ஆஸ்பத்திரிலே சேர்த்துருக்கோம். ஆனா ஒரு டாக்டரும் வைத்தியம் பார்க்க மாட்டேங்குறான். புள்ள துடியா துடிக்கிறான். கொஞ்சம் வந்து பாருங்களேன். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா?..."
இப்படிப்பட்ட வசனங்களின் விளைவு அரசியல்! ஐம்பது லட்சம் ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது...தவறுகள் அவர்களிடம் இல்லை நம்மிடம் தான் .........


இந்த தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இருக்க ஒரே வேலை ,ஹீரோயின பத்திரமா பாத்துக்கறது மட்டும் தான் ... நமக்கு நெறைய வேலை இருக்கு ,முதல்ல அத பார்ப்போம் !!!!!!!!

By...
S.R